சீனா செல்ல கேரள அமைச்சருக்கு அனுமதியளிக்க மறுத்தது சரியான முடிவுதான்: மத்திய அரசு

சீனா செல்ல கேரள மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு அனுமதியளிக்க மறுத்ததுதான் சரியான முடிவுதான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனா செல்ல கேரள மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு அனுமதியளிக்க மறுத்ததுதான் சரியான முடிவுதான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் செங்டு நகரில் ஐ.நா. சபையின் உலக சுற்றுலா அமைப்பின் சார்பில் கடந்த 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வரும்படி கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சீனாவுக்கு செல்வதற்கான அனுமதியை சுரேந்திரனுக்கு அளிப்பதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதற்கு கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் முடிவை துரதிருஷ்டவசமானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்துக்கு புதன்கிழமை வந்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங்கிடம், சீனா செல்ல அமைச்சர் சுரேந்திரனுக்கு அனுமதியளிக்க மறுக்கப்பட்டது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது:
பொதுவாக, நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் தலைவர்களுக்கு அங்கு முறைப்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? நமது தலைவர்களை அவர்களுக்கு இணையானவர்கள் சந்திக்கிறார்களா? என்பதை நமது அரசு ஆராயும். இந்த ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லையெனில், நமது தலைவர்களுக்கு வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதிக்காது.
அதுபோல்தான், சீனாவுக்கு செல்ல சுரேந்திரனுக்கு அனுமதியளிப்பது குறித்து அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் மத்திய அரசு கருத்து கேட்டது. அப்போது, சீனாவில் சுரேந்திரனுக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை என்பது தெரிந்தது. அதை அடிப்படையாகக் கொண்டே, அமைச்சர் சுரேந்திரனுக்கு சீனா செல்ல அனுமதியளிக்கப்படவில்லை.
வெளிநாட்டில் நமது நாட்டு மக்களின் கௌரவம், மரியாதை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது மத்திய அரசின் கடமையாகும். இந்த விவகாரத்தில், நமது நாட்டின் கெரளவமும் சம்பந்தப்பட்டுள்ளது. நமது அமைச்சரை அவருக்கு இணையானவர் சந்திக்காமல், இளநிலை அதிகாரி யாரேனும் சந்தித்தால், அது நல்லதல்ல. ஆதலால், சுரேந்திரன் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவு சரியானதே என்று வி.கே. சிங் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com