10 ஆண்டு பழைமையான டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க என்ஜிடி மறுப்பு

தில்லி, தேசியத் தலைநகர் வலயத்தில் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவில் மாற்றங்கள் செய்யக் கோரி
10 ஆண்டு பழைமையான டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க என்ஜிடி மறுப்பு

தில்லி, தேசியத் தலைநகர் வலயத்தில் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவில் மாற்றங்கள் செய்யக் கோரி மத்திய அரசின் சார்பில் தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டது.

அதிகரித்து வரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களை இயக்கக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. டீசல் வாகனங்கள் மட்டுமே சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறது என்று தகவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று வாதத்தை முன்வைத்தது. எனினும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும், தில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டு வரும் பழைய டீசல் வாகனங்களின் பதிவை ரத்து செய்யுமாறு தில்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், டீசல் வாகனம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்திருந்த உத்தரவில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரி மத்திய அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வியாழக்கிழமை

விசாரித்த தீர்ப்பாயத் தலைவர் - நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

'டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் கார்சினோஜெனிக் உள்ளது. ஒரு டீசல் வாகனத்தில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள மாசுவானது 24 பெட்ரோல் வாகனங்கள் அல்லது 40 சிஎன்ஜி வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் மாசுவுக்கு சமமாக உள்ளது. இந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2015, ஏப்ரல் 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் மாற்றங்கள் செய்யுமாறு கோரியிருந்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் எந்த ஒரு மறுஆய்வு மனுவையும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யவில்லை' என்று தீர்ப்பாய அமர்வு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com