குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான கொலை வழக்கு: நாளை இறுதி விசாரணை

குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான கொலை வழக்கு சனிக்கிழமை இறுதி விசாரணைக்கு வருகிறது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான கொலை வழக்கு: நாளை இறுதி விசாரணை

தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான 2 கொலை வழக்கு சனிக்கிழமை இறுதி விசாரணைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அரியாணாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேரா சச்சா சௌதா அமைப்பு அரியாணாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இதன் தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் (50), இருந்தார். இவருக்கு சமீபத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், குர்மீத் மீதான 2 கொலைகள் தொடர்பான வழக்கின் இறுதிகட்ட விசாரணை சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. 

குர்மீத் குறித்த உண்மைகளை வெளியிட்டதாகக் கூறி பூரா சச் என்ற பத்திரிகையின் உரிமையாளர் சத்திரபதி 2002-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு உதவி செய்ததாக தேரா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்ஜித் சிங் படுகொலை செய்யப்பட்டார். 

இதுதொடர்பாக இருவரின் குடும்பத்தாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 2003-ம் ஆண்டு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 2007-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com