இரவு முழுவதும் கொட்டும் மழையில் மகனின் சடலத்துடன் பரிதவித்த தாய்: மரித்துப் போன மனிதாபிமானம்!  

குடியிருந்த வீட்டு உரிமையாளர் உள்ளே அனுமதிக்காததால் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த மகனின் சடலத்துடன், இரவு முழுவதும் கொட்டும் மழையில் தாய் பரிதவித்த கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது
இரவு முழுவதும் கொட்டும் மழையில் மகனின் சடலத்துடன் பரிதவித்த தாய்: மரித்துப் போன மனிதாபிமானம்!  

ஹைதராபாத்: குடியிருந்த வீட்டு உரிமையாளர் உள்ளே அனுமதிக்காததால் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த மகனின் சடலத்துடன், இரவு முழுவதும் கொட்டும் மழையில் தாய் பரிதவித்த கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரம்மா, இவருக்கு இரண்டு மகன்கள். அங்குள்ள ஒரு வீட்டில் அவர் வாடகைக்கு வசித்து வந்தார். இதில் மூத்தவரான சுரேஷ் (10) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு,   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளான்.

இறந்து போன மூத்த மகனின் சடலத்துடன் வீட்டுக்கு வந்த ஈஸ்வரம்மாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ஜகதீஷ், இறந்து போன சுரேஷின் சடலத்தை வீட்டுக்கு உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

சமீபத்தில்தான் தன் மகளுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்துள்ள நிலையில்,  பிணத்தை உள்ளே அனுமதிப்பதை அபசகுனமாக அவர் கருதியுள்ளார். இதன் காரணமாக இரவு முழுவதும், சுரேஷ் சடலத்துடன் ஈஸ்வரம்மா மற்றும் அவரின் இளைய மகன் சாலையிலலேயே நின்றுள்ளனர்.

அப்போது திடீர் என்று மழை வேறு பெய்துள்ளது. இதனால் வேதனையடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கண்ணாடி சவப்பெட்டி ஒன்றை வரவழைத்து, சுரேஷின் சடலத்தை அதில் வைக்க உதவியுள்ளனர். அத்துடன் இறுதி சடங்குக்கு தங்களால் முயன்ற பணத்தை கொடுத்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர் ஜகதீஷின் இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு சமூக வலை தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அத்துடன் அவர் மீது காவல்துறை வழக்குப் பதிந்து, நடவடிக்கை எடுக்குமாறு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com