பிற மொழிகளுக்கு அதிக மரியாதை கொடுக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த்

நமது நாட்டில் பேசப்படும் பிற பிராந்திய மொழிகளுக்கு அதிக மரியாதையும், உரிய இடமும் கொடுக்க வேண்டுமென்று ஹிந்தி மொழி பேசும் மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
ஹிந்தி தினத்தையொட்டி அந்த மொழிக்கு சிறப்பான பங்காற்றியவர்களுக்கு ராஜ்பாஷா விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை தொடங்கி வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். உடன், மத்திய
ஹிந்தி தினத்தையொட்டி அந்த மொழிக்கு சிறப்பான பங்காற்றியவர்களுக்கு ராஜ்பாஷா விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை தொடங்கி வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். உடன், மத்திய

நமது நாட்டில் பேசப்படும் பிற பிராந்திய மொழிகளுக்கு அதிக மரியாதையும், உரிய இடமும் கொடுக்க வேண்டுமென்று ஹிந்தி மொழி பேசும் மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
அப்போதுதான், நாடு முழுவதும் ஹிந்தியைப் பிரபலமடையச் செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற "ஹிந்தி திவஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
இந்தியாவின் அலுவலக மொழியாக ஹிந்தி அங்கீகரிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும், நாட்டின் சில பகுதிகளில் ஹிந்திக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது.
அண்மையில் பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டம்.
முன்னதாக, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், தங்கள் மீது ஹிந்தி திணிக்கப்படுவதாக சில மாநில மக்கள் நினைக்கின்றனர். அவர்கள் மொழிகளுக்கு நாம் (ஹிந்தி பேசும் மக்கள்) உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
எனவே, ஹிந்தி பேசும் மக்கள் பிற மொழிகளுக்கு உரிய இடத்தை அளிக்க வேண்டும். பிற மொழிகளைப் பேசும் மக்களுக்கும், பிராந்திய மொழிகளுக்கும் உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
ஹிந்தி பேசும் மக்கள் தமிழர்களுக்கு "வணக்கம்' கூறி மரியாதை செலுத்த வேண்டும். சீக்கியர்களுக்கு பஞ்சாபி மொழியில் "சட் ஸ்ரீ அகால்' கூற வேண்டும். முஸ்லிம்களுக்கு உருது மொழியில் "அதாப்' தெரிவிக்க வேண்டும். தெலுங்கு பேசும் மக்களை "காரு' என்று மரியாதையாக அழைக்க வேண்டும்.
பிற மொழித் தழுவல்கள் மூலமும், பிற மாநில கலாசாரத்தை ஏற்றுக் கொள்வதன் மூலமும் நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படும். அண்மையில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஸ்ஹென்கோவை சந்தித்தபோது, ரஷிய மொழியில் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அவர் ஜெய்ஹிந்த் என்று பதில் கூறினார். இது இருவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பிராந்திய மொழிகளில் உள்ள பிரபலமான வார்த்தைகளை ஹிந்தி பேசும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நமது மொழி செழுமையடையும். ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர் உள்ளிட்டோர்தான் ஹிந்தியை நமது நாட்டின் அலுவலக மொழியாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தனர் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆங்கிலம் தெரியாமல் இந்தியா பொருளாதார சக்தியாக உருவெடுக்க முடியாது என்று கூறுபவர்களுக்கு நான் ஒரு கேள்வியைக் கேட்க ஆசைப்படுகிறேன்.
சீனாவில் அவர்களின் தாய்மொழியான மாண்டரின் மொழிதான் கோலோச்சுகிறது. அந்த நாடு உலகின் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த எனக்கு தாய் மொழி ஹிந்தி அல்ல. எனினும், ஹிந்தி பேசுவதை நான் பெருமையாக உணர்கிறேன். எங்கள் மாநிலத்திலும் ஹிந்தி பரவலாகப் பேசப்படுகிறது என்றார்.
ராம்நாத் கோவிந்த், ராஜ்நாத் சிங் இருவரும் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஹிந்தியில் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com