பொதுக்குழுவின் தீர்மானங்களை ஏற்கக் கூடாது

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் கட்சி விதிகளுக்கு புறம்பாக கூட்டப்பட்ட பொதுக் குழுவின் தீர்மானங்களை ஏற்கக் கூடாது என்று தில்லியில் தலைமைத் தேர்தல்
தில்லியில் வியாழக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனு அளித்துவிட்டு வரும் தினகரன் ஆதரவு அதிமுக எம்பிக்கள் விஜிலா சத்யானந்த்,  எம். உதயகுமார், வசந்தி முருகேசன், கோகுல கிருஷ்ணன், பி. செங்குட்டுவன்.
தில்லியில் வியாழக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனு அளித்துவிட்டு வரும் தினகரன் ஆதரவு அதிமுக எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், எம். உதயகுமார், வசந்தி முருகேசன், கோகுல கிருஷ்ணன், பி. செங்குட்டுவன்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் கட்சி விதிகளுக்கு புறம்பாக கூட்டப்பட்ட பொதுக் குழுவின் தீர்மானங்களை ஏற்கக் கூடாது என்று தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்பிக்கள் 5 பேர் வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினர்.
சென்னையில் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், "கட்சியின் தாற்காலிகப் பொதுச் செயலர் வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து; அவரால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது' என்பன உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், எம். உதயக்குமார், பி.செங்குட்டுவன், என். கோகுலகிருஷ்ணன், வசந்தி முருகேசன் ஆகியோர் வியாழக்கிழமை தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி மற்றும் இரு ஆணையர்களை நேரில் சந்தித்துப் பேசினர்.
பின்னர் இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் விஜிலா சத்யானந்த் கூறியதாவது: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூட்டிய பொதுக்குழு, முறையாக அறிவிப்பு கொடுத்து கூட்டப்படவில்லை. இதனால், அக்கூட்டம் பொதுக்கூட்டம் தானே தவிர பொதுக்குழுக் கூட்டம் அல்ல. எனவே, அக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது.
அதிமுக கட்சி விதிகளின்படி ஒரு கூட்டத்தை கூட்டுவதற்குப் பொதுச் செயலரின் அனுமதியைப் பெற வேண்டும். அவர்கள் அனுமதி அளிக்காதபட்சத்தில் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் கூட்டம் நடத்துவதற்கு எழுத்துப்பூர்வமாக பொதுச் செயலரிடம் வேண்டுகோள் வைத்து அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகளை கூட்டத்தை நடத்தியவர்கள் பின்பற்றவில்லை. மேலும், அவர்கள் 12 தீர்மானங்களையும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து நிலுவையில் உள்ள வழக்குகளை வாபஸ் பெறவும், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களை திரும்பப் பெறவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பொதுச் செயலர் வி.கே. சசிகலா, துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பிரமணாப் பத்திரங்களை திரும்பப் பெற அத்தரப்பினர் அணுகினால் எங்கள் அனுமதியில்லாமல் தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்குத்தான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அக்கூட்டத்தில் எடுக்கப்படும் விஷயங்கள் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டே இருக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான அடுத்த விசாரணை நீதிமன்றத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அதுவரை எந்தவித நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கக் கூடாது என வலியுறுத்தினோம்.
மேலும், துணைப் பொதுச் செயலர் என்ற முறையில் டி.டி. வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் தொடர்பான பட்டியலையும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளோம். அதிமுக அம்மா அôணியின் பொதுச் செயலரின் அனுமதி பெற்று முறையான பொதுக் குழுக் கூட்டத்தை டி.டி.வி. தினகரன் விரைவில் கூட்டுவார். நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்புக்குப் பிறகு இக்கூட்டம் கூட்டப்படும் என்றார் விஜிலா சத்யானந்த்.
எம். உதயக்குமார் எம்.பி. கூறுகையில், "பொதுக் குழுவைக் கூட்டுவதற்கு கர்நாடக நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு தற்போது வரையிலும் நடைமுறையில் உள்ளது. இதுபற்றியும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால், இரட்டை இலைச் சின்னம் உள்ளிட்ட விஷயங்களில் உண்மையான அதிமுகவான எங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்றும் கோரினோம். எங்களது கருத்துகளை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர், இந்த விவகாரத்தில் சட்ட விதிகளின்படி அனைத்தும் -ஆராயப்படும் எனத் தெரிவித்துள்ளார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com