ஏழுமலையான் நாள்காட்டி, கையேடுகளின் விலை உயர்வு

திருப்பதி ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் வெளியிடும் நாள்காட்டி, கையேடுகளின் விலையை தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது.
ஏழுமலையான் நாள்காட்டி, கையேடுகளின் விலை உயர்வு

திருப்பதி ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் வெளியிடும் நாள்காட்டி, கையேடுகளின் விலையை தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது.
திருமலை - திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டின் நாள்காட்டி, கையேடுகளை அச்சிட்டு மானிய விலையில் விற்று வருகிறது.
பக்தர்களிடம் இதற்கு வரவேற்பை அதிகரிக்க தேவஸ்தானம் தற்போது ஏழுமலையான் திருவுருவம், உற்சவ சேவைகள், வாகன சேவைகள், அபிஷேக - ஆராதனை, தீர்த்தவாரி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட வண்ண புகைப்படங்களுடன் நாள்காட்டி, கையேடுகளை அச்சிட்டு வருகிறது.
ஆங்கிலப் புத்தாண்டுக்கான நாள்காட்டி அச்சிடும் பணி ஜூன் மாதமே தொடங்கிவிடும். இப்பணியை தேவஸ்தானம் தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. இவ்வாறு அச்சிடப்படும் நாள்காட்டி மற்றும் கையேடு வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முதல் நாள் மாலையில், ஆந்திர முதல்வரால் வெளியிடப்படும். இந்நிலையில், தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பால் வரும்
2018-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி, கையேடுகளின் விலையை தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது.
வரும் 22-ஆம் தேதி மாலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய நாள்காட்டி, கையேடுகளை வெளியிட உள்ளார். இம்முறை 20 லட்சம் நாள்காட்டிகள், 15 லட்சம் கையேடுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும் பிரம்மோற்சவ சமயத்தில் திருமலையில் உள்ள தேவஸ்தான புத்தக விற்பனை மையங்களில் இவை விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

விலைப் பட்டியல்

ஏழுமலையான்-பத்மாவதி திருவுருவம் 7 - 10
ஏழுமலையான் திருவுருவம் கொண்டது 10 - 15
பஞ்சாங்க நாள்காட்டி 15 - 20
12 பக்க வண்ண நாள்காட்டி 75 - 90
சிறிய கையேடு 75 - 90
பெரிய கையேடு 100 - 120

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com