"தூய்மையே சேவை' பிரசாரத்தை தொடங்கிவைத்தார் குடியரசுத் தலைவர்

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் "தூய்மையே சேவை' பிரசாரத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் 'தூய்மையே சேவை' பிரசாரத் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து துப்புரவுப் பணியாளருக்கு மரியாதை செய்யும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். உடன், அந்த
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் 'தூய்மையே சேவை' பிரசாரத் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து துப்புரவுப் பணியாளருக்கு மரியாதை செய்யும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். உடன், அந்த

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் "தூய்மையே சேவை' பிரசாரத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
மத்திய அரசின் "தூய்மை இந்தியா' திட்டத்தை முன்னிறுத்தும் வகையில், "தூய்மையே சேவை' என்ற பிரசாரத்தை மத்திய குடிநீர், துப்புரவுத் துறை மேற்கொள்ளவிருக்கிறது.
நாடு முழுவதும் 14 நாள்கள் மேற்கொள்ளப்படவுள்ள இப்பிரசாரத்தை, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகேயுள்ள இஷ்வாரி கஞ்ச் என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்.
பின்னர், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பான உறுதிமொழியை ஏற்று, அவர் பேசியதாவது:
திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லை என்ற பெருமையை, இஷ்வாரி கஞ்ச் கிராமம் பெற்றுள்ளது. இதற்காக, கிராம மக்களைப் பாராட்டுகிறேன்.
சுகாதாரமான நிலையை எட்டுவதற்காக, நமது நாடு போராடிக் கொண்டிருக்கிறது. சுகாதாரம் என்பது, துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசுத் துறைகளை மட்டும் சார்ந்த விஷயம் அல்ல. அனைத்து தரப்பினரின் பங்களிப்பு இருக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கங்களை விரைவாக எட்டுவதே, மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
சுற்றுப்புறங்கள் தூய்மையாக இல்லாவிட்டால் தொற்று நோய்கள் பரவுவது மட்டுமன்றி மன நோய்களுக்கும் வழிவகுக்கும். மணமகன் வீட்டில் கழிப்பறை இல்லாவிட்டால் திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் பெண்களை நான் பாராட்டுகிறேன் என்றார் ராம் நாத் கோவிந்த்.
பூஜை அறையை விட கழிப்பறை முக்கியம்: இந்நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக் பேசுகையில், "ஒரு வீட்டில் பூஜை அறையைவிட கழிப்பறை இருக்க வேண்டியது அவசியம்' என்றார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "தூய்மையே சேவை பிரசாரத்தை, உத்தரப் பிரதேசத்தில் தொடங்கிவைத்தமைக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், மாநிலத்தில் இதுவரை 10 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்
டுள்ளன.
நிகழாண்டு இறுதிக்குள் 78 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படும். அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் மாநிலத்தில் திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லை என்ற நிலையை எட்டுவோம்' என்றார்.
2019-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லை என்ற பிரதமர் மோடியின் இலக்கை எட்டுவதற்கான முயற்சியே இந்த பிரசாரம் என்று மத்திய குடிநீர், துப்புரவுத் துறை அமைச்சர் உமா பாரதி கூறினார்.
இந்த 14 நாள் பிரசாரத்தின் ஒருபகுதியாக வரும் 17-ஆம் தேதி (பிரதமர் மோடியின் பிறந்த தினம்) கழிப்பறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com