பாதுகாப்புடன் கூடிய ரயில் சேவையை ஜப்பானிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

பாதுகாப்பு, தூய்மை ஆகியவற்றுடன் கூடிய ரயில் சேவையை எவ்வாறு பயணிகளுக்கு அளிப்பது என்று ஜப்பான் அரசிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று சிவசேனை கட்சி

பாதுகாப்பு, தூய்மை ஆகியவற்றுடன் கூடிய ரயில் சேவையை எவ்வாறு பயணிகளுக்கு அளிப்பது என்று ஜப்பான் அரசிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனைக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான "சாம்னா'வில் வெள்ளிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய ரயில்வேயில் நிலவிவரும் அலட்சியத்தன்மை காரணமாக மிகவும் வெட்கப்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது நாட்டில் ரயில் விபத்துகள் நிகழாமல் தினசரி பொழுது கழிவதில்லை. ரயில்களுக்கு இடையே விபத்தை யார் முதலில் நிகழ்த்துவது என்று மாரத்தான் போட்டி நடப்பது போல் தெரிகிறது.
நாட்டில் புகழ்பெற்ற ரயில்களில் ஒன்றான ராஜ்தானி விரைவு ரயில் தில்லி அருகே வியாழக்கிழமை தடம்புரண்டது. மிகவும் பாதுகாப்பான ரயில் நிலையம் இருக்கும் பிரிவில் ராஜ்தானி ரயில் தடம் புரண்டிருப்பதை தீவிரமான விஷயமாக கருத்தில் கொள்ள வேண்டாமா?
கடந்த 1964-ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானில் புல்லட் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 500 முதல் 600 கி.மீ. தொலைவை ஒரு மணி நேரத்தில் அந்த ரயில் கடக்கும். கடைசி ரயில் நிலையத்துக்கு புல்லட் ரயில் வந்துசேர்ந்தவுடன் ரயிலின் பெட்டிகள் 7 நிமிடத்தில் தூய்மைப்படுத்தப்படும்.
ஜப்பானுடன் ஒப்பீடு செய்து பார்க்கும்போது நமது நாட்டில் ரயில்கள் ஊர்ந்து செல்லும்போதே தடம் புரள்கின்றன.
ரயில்களை பாதுகாப்பு, தூய்மை ஆகியவற்றுடன் எவ்வாறு இயக்க வேண்டும் என்பதை நாம் ஏன் ஜப்பானிடமிருந்து கற்றுக்கொள்ளக் கூடாது? என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாட்டிலேயே முதல் முறையாக குஜராத் மாநிலம், ஆமதாபாத், மும்பை இடையேயான புல்லட் ரயில் சேவை திட்டத்தை ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் கனவேயன்றி, சாமானிய மக்களின் கனவல்ல என்று சிவசேனை விமர்சித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com