புல்லட் ரயில் திட்டத்துக்கான நேரமல்ல; இருப்பதை மேம்படுத்தும் நேரம்: மெட்ரோ மேன்

மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் முன்னாள் தலைவர் இ. ஸ்ரீதரன், இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதை வரவேற்கவில்லை.
புல்லட் ரயில் திட்டத்துக்கான நேரமல்ல; இருப்பதை மேம்படுத்தும் நேரம்: மெட்ரோ மேன்


நாக்பூர்: மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் முன்னாள் தலைவர் இ. ஸ்ரீதரன், இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதை வரவேற்கவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல; மாறாக தற்போதிருக்கும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது, வேகத்தை கூட்டுவது, வசதிகளை அதிகரிப்பது, பயணிகளை வசதியாக இருக்கச் செய்தே மிக முக்கியமான பணி என்று கூறுகிறார்.

இருக்கும் திட்டத்தை சீராக்கி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்த பிறகு தான் புல்லட் ரயில் திட்டத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும். இன்னும் 8 அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் புல்லட் ரயில் சேவை தேவைப்படும் என்று ஸ்ரீதரன் கூறுகிறார்.

நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரீதரன், இந்த திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் ரூ.50 லட்சம் செலவு அதிகரிக்கும். தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை முடிக்க 10 ஆண்டுகள் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகள் 3 மாதத்துக்குள் திட்டம் முடிக்கப்பட்டது சாதனையாகக் கருதப்பட்டது. இதனால் ஏராளமான வருவாய் சேமிக்கப்பட்டது.

அதோடு, தில்லியில் 65 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தால் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது. 35 ஆயிரம் கார்கள் சாலைகளில் இயங்குவது குறைந்துள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com