ராம் ரஹீமுக்கு எதிரான வழக்குகளில் இன்று விசாரணை

தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிரான இரண்டு கொலை வழக்குகள் மீதான விசாரணை, பஞ்ச்குலா நீதிமன்றத்தில் சனிக்கிழமை (செப்.16)விசாரணைக்கு வருகிறது.
ராம் ரஹீமுக்கு எதிரான வழக்குகளில் இன்று விசாரணை

தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிரான இரண்டு கொலை வழக்குகள் மீதான விசாரணை, பஞ்ச்குலா நீதிமன்றத்தில் சனிக்கிழமை (செப்.16)விசாரணைக்கு வருகிறது.
இதனை முன்னிட்டு, பஞ்ச்குலா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹரியாணாவில் பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி, தேரா சச்சா சௌதா அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, பஞ்ச்குலா மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
இந்த இரு வழக்குகளிலும் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரஹீம் சிங், காணொலி முறை மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராகி தமது தரப்பு வாதத்தை முன்வைக்கவுள்ளார். இதனை முன்னிட்டு, பஞ்ச்குலா பகுதி முழுவதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் இந்தப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பலாத்கார வழக்கில் ராம் ரஹீமை பஞ்ச்குலா நீதிமன்றம் கடந்த மாதம் 25-ஆம் தேதி குற்றவாளியாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவரது ஆதரவாளர்கள் கலவரங்களில் ஈடுபட்டனர். இந்த கலவரங்களில் 40 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com