ரோஹிங்கயா முஸ்லிம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு

சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கயா முஸ்லிம்களை திருப்பி அனுப்பும் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை (செப்.18) பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய இருக்கிறது.
ரோஹிங்கயா முஸ்லிம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு

சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கயா முஸ்லிம்களை திருப்பி அனுப்பும் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை (செப்.18) பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய இருக்கிறது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
முன்னதாக, மியான்மரில் இருந்து இடம் பெயர்ந்து சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கயா முஸ்லிம்கள், பயங்கரவாத இயக்கங்களுக்கு துணைபோவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ஒவ்வொரு மாநில அரசும், தங்கள் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கயா முஸ்லிம்களை கண்டறித்து, வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மியான்மரில் இருந்து இந்தியா வந்து அகதிகளாக தங்கியுள்ள முகமது ஷாகீர், முகமது சலீமுல்லா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்ட நாங்கள் இந்தியாவில் தங்கியுள்ளோம்.
மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த தொடர் வன்முறையால் அங்கு தங்க முடியாமல் இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளோம்.
இந்தச் சூழ்நிலையில் எங்களை இந்தியாவில் இருந்து மீண்டும் மியான்மருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
இதனை நிறுத்த வேண்டும். ஏனெனில், இந்த நடவடிக்கை சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு எதிரானது' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் இது தொடர்பாகக் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும்' என்றார்.
14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கயா முஸ்லிம்கள் ஐ.நா. அகதிகள் ஆணையத்தில் பதிவு செய்து கொண்டு இந்தியாவில் தங்கியுள்ளனர்.
எனினும், ஜம்மு, ஹைதராபாத், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், டெல்லி-என்சிஆர், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கயா முஸ்லிம்கள் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com