வாகன ஓட்டிகள் ஒன்றும் பட்டினியாக இல்லை; பெட்ரோலுக்கு கூடுதலாக செலவிடலாம்: இணை அமைச்சரின் பேச்சு

கார், பைக் வைத்திருப்பவர்கள் ஒன்றும் பட்டினியாக இல்லை, பெட்ரோலுக்கு அவர்கள் கூடுதலாகவே செலவிடலாம் என்று மத்திய இணை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் கூறியுள்ளார்.
வாகன ஓட்டிகள் ஒன்றும் பட்டினியாக இல்லை; பெட்ரோலுக்கு கூடுதலாக செலவிடலாம்: இணை அமைச்சரின் பேச்சு


திருவனந்தபுரம்: கார், பைக் வைத்திருப்பவர்கள் ஒன்றும் பட்டினியாக இல்லை, பெட்ரோலுக்கு அவர்கள் கூடுதலாகவே செலவிடலாம் என்று மத்திய இணை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பேசிய அமைச்சர் கே.ஜே. அல்போன்சின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 50 சதவீதம் அளவுக்குக் குறைந்திருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தினந்தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலைகள் மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனமும், எதிர்க்கட்சிகள் இது குறித்து கடுமையாக விமரிசித்து வரும் நிலையில், மத்திய இணை அமைச்சர் அல்போன்ஸ் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அதிகமாக வருமானம் ஈட்டி வரி கட்ட முடியும் நபர்களுக்கு வரி விதிக்கிறோம். அதே போல, சொந்தமாக கார், பைக் வைத்திருப்பவர்கள் பட்டினியாகவா உள்ளார்கள். அவர்களால் அதிகமாக செலவிட முடியும் போது செலவிடட்டுமே என்று கூறியுள்ளார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலியம் துறை முன்னாள் அமைச்சர் வீரப்ப மொய்லி, அல்போன்ஸ் பேச்சு மிகவும் மோசமானது. மக்களின் அடிப்படை பிரச்னையைக் கூட புரிந்து கொள்ள முடியாத இவர்கள் எல்லாம் எப்படி அரசியலில் நுழைந்து அமைச்சர்கள் ஆனார்கள் என்றே புரியவில்லை. மோடி அரசில் அமைச்சர்களாக இருக்கும் பலரும் இப்படித்தான் உள்ளனர் என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com