செப்டம்பர் 17-ல் பிறந்தநாள் காணும் பிரபலங்கள்

செப்டம்பர் 17-ஆம் தேதி மிகவும் சிறப்பானதாகவே உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் மூவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 17-ல் பிறந்தநாள் காணும் பிரபலங்கள்

தந்தை பெரியார்

பகுத்தறிவு பகலவன் என்று அறியப்படும் தந்தை பெரியாரின் இயற்பெயர் ஈ.வெ.ராமசாமி. இவர் 1879-ஆம் ஆண்டு செப். 17-இல் ஈரோட்டில் பிறந்தார். இவரது தந்தை வெங்கட நாயக்கர் நாயுடு, தாயார் சின்னத்தாயம்மாள்.

சுயமரியாதையையும், பகுத்தறிவையும் முன்னிறுத்தி திராவிட இயக்கத்தை தோற்றுவித்தார். சாதிய வன்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கைகளை எதிர்த்தும், பெண் விடுதலைக்காவும் போராடினார். 

தமிழகம் முழுவதும் பெரியாரின் 139-ஆவது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.

நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ல் பிறந்தார். அவர் தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி, ஹீராபென் தம்பதியரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தார்.

இவர் 1998-ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றார். குடியரசு இந்தியாவின் 14-ஆவது பிரதமராவார். குஜராத் மாநிலத்தில் 2001-ம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை தொடர்ந்து முதல்வராக இருந்தவர். இன்று இவர் தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அஷ்வின் ரவிச்சந்திரன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சித்ரா தம்பதிக்கு செப்டம்பர் 17, 1986-ல் பிறந்தார். 

நவம்பர் 6, 2011-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். 

இதையடுத்து, குறைந்த டெஸ்ட் போட்டியிலேயே 50, 100, 150 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இந்தியப் பந்துவீச்சாளர், அதிகமுறை தொடர்நாயகன் விருது பெற்ற இந்தியர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

சர்வதேச போட்டிகளில் பிஸியாக இருக்கும் அஷ்வின், இன்று தனது 31-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com