கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணம்: ஆக்ஸிஜன் சப்ளையர் கைது 

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில்
கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணம்: ஆக்ஸிஜன் சப்ளையர் கைது 

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய ஆக்ஸிஜனை வழங்கிய புஷ்பா நிறுவனத்தின் உரிமையாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் செயல்படும் பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) பற்றாக்குறை இருந்ததுதான் காரணம் என கூறப்பட்டது. அரசு தரப்பில் மறுக்கப்பட்டு மூளை அழற்சி காரணம் என கூறுப்பட்டது.

மாநில பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைப்பதற்கான சூழலை இச்சம்பவம் உருவாக்கியது. மருத்துவமனையில் பிராண வாயு உருளைகள் போதிய அளவில் இருப்பு இல்லாததே குழந்தைகள் இறப்புக்குக் காரணம் எனவும் கூறப்பட்டது.

மருத்துவமனைக்கு பிராண வாயு சிலிண்டர்களை சப்ளை செய்யும் புஷ்பா ஏஜென்சி நிறுவனம், அனுப்பிய பிராண வாயு உருளைக்கு உரிய முறையில் பணம் தர மருத்துவமனை நிர்வாகம் லஞ்சம் கேட்டதால் பிராண வாயு உருளைகளை தொடர்ந்து அனுப்ப மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து விசாரிக்க மாநில தலைமைச் செயலர் ராஜீவ் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சம்பவத்தை விசாரித்த அக்குழு, பாபா ராகவ் மருத்துவமனை முன்னாள் தலைவர் மருத்துவர் ராஜீவ் மிஸ்ரா, மயக்க மருந்தியல் துறை முன்னாள் தலைவர் சதீஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த மயக்க மருந்தியல் துறை மருத்துவர் சதீஷ் கோரக்பூர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் சரணடைந்தார்.

இந்நிலையில், பிராண வாயு உருளைகள் போதிய அளவு அனுப்பததே குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு கோரணம் என போலீசாரால் தேடப்பட்டு வந்த புஷ்பா ஏஜென்சி உரிமையாளர் மணிஷ் பண்டாரி என்பரை டெயோரியா பகுதியில் போலீஸார் இன்று கைது செய்தனர்.

குழந்தைகள் மரணம் தொடர்பான வழக்கில் இதுவரை ஒன்பது பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com