இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் துவக்கத்தில் 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 6-ஆவது வரிசை வீரராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்தார் தோனி நிதானமாக ஆடி அணியின் ரன்களை சேர்த்தார்.

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தும் நோக்கத்தோடு அதிரடி ஆட்டத்திலும் ஈடுபட்டார். மொத்தம் 88 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரி உட்பட 2 இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டு 79 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து இந்திய அணி 282 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தது. பின்னர் மழையின் காரணமாக ஆஸ்திரேலியா களமிறங்குவதில் தாமதமானது. மழை காரணமாக 21 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 21 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

இந்திய அணித்தரப்பில் அதிகபட்சமாக தோனி 79 ரன்களும், ஹார்திக் பாண்டியா 83 ரன்களும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com