காங்கிரஸ் எம்எல்ஏ மீதான பாலியல் வழக்கில் மீண்டும் விசாரணை

பஞ்சாபில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை தேசிய மகளிர் ஆணையம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

பஞ்சாபில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை தேசிய மகளிர் ஆணையம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
அந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விளக்கமளிக்குமாறு பஞ்சாப் அரசுக்கு நோட்டீஸýம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மாநில முன்னாள் முதல்வர் பேயந்த் சிங்கின் பேரனும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான குர்கீரத் சிங் கோட்லிக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரையும் மீண்டும் விசாரணைக்குட்படுத்தத் திட்ட
மிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்டியா டார்னேண்ட் என்ற பெண் கடந்த 1994-ஆம் ஆண்டு பஞ்சாபில் இருந்தபோது சில நபர்கள் அவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகத் தெரிகிறது.
இதில் தொடர்புடைய பலரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் குர்கீரத் சிங் முக்கியமானவர். இந்தச் சம்பவத்தில் அவருக்குத்தான் முக்கியத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த 1999-ஆம் ஆண்டு அவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அண்மையில் நாளிதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாகப் பேட்டியளித்த கேட்டியா டார்னேண்ட், தனக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். இந்நிலையில், அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்குட்படுத்துமாறு தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளப் பிரமுகர்கள் மனு அளித்தனர்.
அதனைப் பரிசீலித்த மகளிர் ஆணையம், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கமளிக்குமாறு பஞ்சாப் அரசுக்கும், மாநில காவல்துறை உயரதிகாரிக்கும் (டிசிபி) நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பான தகவல்களை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com