காதல் ஜிகாத் திருமண விவகாரம்: என்ஐஏ விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள முஸ்லிம் நபர் வழக்கு

ஹிந்து பெண்ணை காதலித்து, மதமாற்றம் செய்து திருமணம் செய்த (காதல் ஜிகாத்) விவகாரம் குறித்து தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்தும் விசாரணைக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில்

ஹிந்து பெண்ணை காதலித்து, மதமாற்றம் செய்து திருமணம் செய்த (காதல் ஜிகாத்) விவகாரம் குறித்து தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்தும் விசாரணைக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் கேரளத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் வழக்கு தொடுத்துள்ளார்.
கேரளத்தை சேர்ந்த ஷபீன் ஜஹான் என்பவர், அகிலா என்ற ஹிந்து மதப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு முன்பு, மருத்துவரான அகிலா முஸ்லிம் மதத்துக்கு மாறியதுடன்,தனது பெயரையும் ஹடியா என்று மாற்றிக் கொண்டார்.
இதற்கு அவரது தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது மகளை மூளைச்சலவை செய்ததுடன், கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து விட்டனர் என்று குற்றம்சாட்டி, கேரள உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். 
ஆப்கானிஸ்தான் அல்லது சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதற்கு தனது மகளை கணவரது குடும்பத்தினர் அனுப்பவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அந்தத் திருமணத்தை செல்லாது என்று அறிவித்தது. இதை எதிர்த்து தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து 
விட்டது. 
மேலும், இந்தத் திருமணம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்
துரைத்தது.
இந்நிலையில், என்ஐஏ விசாரணைக்கு தடைகோரி, உச்ச நீதிமன்றத்தில் ஷபீன் ஜஹான் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
எனது மனைவியை அவரது குடும்பத்தினர் கடுமையாக துன்புறுத்தி வருகின்றனர். இதனால் அவர் மன உளைச்சலில் இருக்கிறார். அவரைப் பார்க்க யாரையும் குடும்பத்தினர் அனுமதிப்பதில்லை. 
ஓர் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹிந்து அமைப்புகளால் அவருக்கு அச்சுறுத்தல் உள்ளது. 
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில், என்ஐஏ அமைப்பு விசாரணை நடத்தவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்
டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com