துர்கா பூஜை அமைதியை சீர்குலைக்கக் கூடாது: ஆர்எஸ்எஸ், விஹெச்பிக்கு மம்தா எச்சரிக்கை

ஆர்எஸ்எஸ், விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி), பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழாவின்போது அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கக் கூடாது என்று அந்த மாநில முதல்வரும்
துர்கா பூஜை அமைதியை சீர்குலைக்கக் கூடாது: ஆர்எஸ்எஸ், விஹெச்பிக்கு மம்தா எச்சரிக்கை

ஆர்எஸ்எஸ், விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி), பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழாவின்போது அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கக் கூடாது என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி எச்சரித்தார்.
இதுதொடர்பாக கொல்கத்தாவில் உள்ள அந்த மாநில தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:
விஜயதசமி பண்டிகையை (செப்.30) இல்லங்களிலும், வீதிகளில் பந்தல் அமைத்தும் கொண்டாடக் கூடாது என மாநில அரசு அறிவிக்கவில்லை.
ஆனால், சில அமைப்புகள் இதுதொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன. அக்டோபர் 1-ஆம் தேதி ஏகாதசியும், முஸ்லிம்களின் மொஹரம் பண்டிகையையும் ஒரே நாளில் வருவதால் அன்றைய தினம் துர்கா சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது. அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை துர்கா சிலைகளைக் கரைக்கலாம்.
அந்நாளில் விஜயதசமியும் வழக்கம்போல் கொண்டாடப்படும். பெண்கள் ஒருவருக்கொருவர் நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வது வழக்கம்.
இதுபோன்ற பண்டிகைகளை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்யக் கூடாது. அதுபோன்ற முயற்சிகளில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மம்தா பானர்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com