"தூய்மையே சேவை' பிரசாரத்துக்கு தொலைக்காட்சிகள், எஃப்.எம். நிலையங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

தூய்மையை அறிவுறுத்தும் "தூய்மையே சேவை' பிரசாரத்துக்கு தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள் (எஃப்.எம்.) தங்களது நிகழ்ச்சிகளில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மத்திய

தூய்மையை அறிவுறுத்தும் "தூய்மையே சேவை' பிரசாரத்துக்கு தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள் (எஃப்.எம்.) தங்களது நிகழ்ச்சிகளில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 27ஆம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும்போது, செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரையிலும் மத்திய அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தூய்மையே சேவை (ஸ்வச்தா ஹை சேவா) பிரசாரத்தில் மக்கள் பங்குபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உத்தரப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகளுக்கு மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான சூழலை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மத்திய அரசால் தூய்மையே சேவை பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஊடகத்துக்கு வலுவான சமூக மற்றும் கலாசார தொடர்புள்ளது. குறுகிய கால அவகாசத்தில் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும் சாத்தியக்கூறு, ஊடகத்திடம் உள்ளது.
எனவே, நாட்டு மக்களிடையே மத்திய அரசின் பிரசாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், மக்கள் மத்தியில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும் ஊடகம் முக்கியப் பங்காற்ற வேண்டும். இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் தூய்மையே சேவை பிரசாரத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த சுற்றறிக்கையில் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே, தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் அண்மையில் வெளியான "டாய்லட்- ஏக் பிரேம் கதா' எனும் ஹிந்தி திரைப்படம், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக 
ஒளிபரப்பப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com