மும்பை: ஆர்.கே.ஸ்டூடியோவில் தீ விபத்து

மும்பையின் செம்பூர் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ஆர். கே. ஸ்டூடியோவில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மும்பையின் செம்பூர் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ஆர்.கே.ஸ்டூடியோவில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மறைந்த பாலிவுட் நடிகர் ராஜ் கபூரால் நிறுவப்பட்ட இந்த ஸ்டூடியோவில், ஆர்.கே.திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தளவாடப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில், ஸ்டூடியோ கட்டடத்தின் தரை தளத்தில் சனிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், 6 வாகனங்களில் சென்ற தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீயணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. ஆனால், மின்சார வயர்கள் மற்றும் சாதனங்கள், அலங்கார உபகரணங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், விபத்துக்கான காரணத்தை உறுதி செய்வதற்காக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com