ராம் ரஹீமுக்கு எதிரான வழக்குகள் நாளை மீண்டும் விசாரணை

தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிரான இரண்டு கொலை வழக்குகள் மீதான விசாரணை, பஞ்ச்குலா நீதிமன்றத்தில் வரும் வாரத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
ராம் ரஹீமுக்கு எதிரான வழக்குகள் நாளை மீண்டும் விசாரணை

தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிரான இரண்டு கொலை வழக்குகள் மீதான விசாரணை, பஞ்ச்குலா நீதிமன்றத்தில் வரும் வாரத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
அதில் ஒரு வழக்கின் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹரியாணாவில் பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி, தேரா சச்சா சௌதா அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, பஞ்ச்குலா மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த இரு வழக்குகளிலும் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரஹீம் சிங், சிறையில் இருந்தபடி காணொலி முறை (விடியோ கான்ஃபரன்சிங்) மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராகி தமது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த ராம் ரஹீமின் வழக்குரைஞர் எஸ்.கே.கர்க், "இருவேறு கொலை வழக்குகளின் மீதான விசாரணையும் அடுத்த வாரம் தொடர்ந்து நடைபெறும்; இறுதி வாதங்கள் அனைத்தும் விரைவில் நிறைவடையும்' என்றார்.
முன்னதாக, வழக்கு விசாரணையையொட்டி, பஞ்ச்குலா பகுதி முழுவதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் இந்தப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com