ஹைதராபாத் இணைப்பு தின விழா: ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்பு

இந்திய ஒன்றியத்தில் முந்தைய ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம் இணைக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, நிஜமாபாதில் நடைபெறும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
ஹைதராபாத் இணைப்பு தின விழா: ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்பு

இந்திய ஒன்றியத்தில் முந்தைய ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம் இணைக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, நிஜமாபாதில் ஞாயிற்றுக்கிழமை (செப்.18) நடைபெறும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலின் முன்முயற்சியால் ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம், இந்தியாவுடன் கடந்த 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி ஒன்றிணைக்கப்பட்டது.
இந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு தெலங்கானா மாநில பாஜக சார்பில் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிஜாமாமாபாதில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெறும் விழாவில் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.
இந்தத் தகவலை தெலங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ், ஹைதராபாதில் சனிக்கிழமை கூறினார்.
இந்த விழா தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் கே.லட்சுமண் கூறியதாவது: செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, தெலங்கானா விடுதலை தினமாகும். இந்த தினத்தை அரசு விழாவாக, மாநில அரசு கொண்டாட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசமாக இருந்தபோது இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு அளித்து வந்த தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தற்போது வாக்கு வங்கி அரசியலுக்காக, பின்வாங்கி விட்டார் என்றார் அவர்.
இதனிடையே, மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனை சந்தித்த கே.லட்சுமண் தலைமையிலான பாஜக தலைவர்கள், ஹைதராபாத் இணைப்பு தின விழாவைக் கொண்டாடுமாறு தெலங்கானா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com