குப்பையைக் கண்டுபிடித்து பரிசைத் தட்டிச் செல்லுங்கள்: வைரலாகும் புகைப்படம்

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக லக்னௌவில் உள்ள குடிசைப் பகுதிக்குச் சென்று தெருக்களை பெருக்கி சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
குப்பையைக் கண்டுபிடித்து பரிசைத் தட்டிச் செல்லுங்கள்: வைரலாகும் புகைப்படம்


லக்னௌ: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக லக்னௌவில் உள்ள குடிசைப் பகுதிக்குச் சென்று தெருக்களை பெருக்கி சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், மாநில ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுரேஷ் கன்னா மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மிகவும் ஜன நெருக்கடி நிறைந்த அட்டா பகுதியில், முதல்வர் உள்ளிட்டோர் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துடைப்பத்தால் தெருக்களை கூட்டி சுத்தம் செய்தனர்.

அப்போது அங்கிருந்த பொதுக் கழிப்பிட பராமரிப்பாளரிடம், கழிப்பறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியதோடு, அவரது ஊதியம் எவ்வளவு என்று கேட்டு அதனை உயர்த்தி வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.

மேலும் அப்பகுதி வாழ் மக்களிடையே பல்வேறு குறைகளையும் கேட்டறிந்தார் யோகி ஆதித்யநாத்.

இந்த நிலையில், அவர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துடைப்பத்தால் தெருவை சுத்தம் செய்வது போன்ற புகைப்படம் கடும் விமரிசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தெரு ஏற்கனவே சுத்தம் செய்து தூய்மையாக இருக்கும் நிலையில், அவர்கள் பெருக்குவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் பலரும், குப்பையைக் கண்டுபிடித்து பரிசுகளைத் தட்டிச் செல்லுங்கள் என்பது போன்ற கருத்துகளை பதிவிட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com