பத்மநாப சுவாமி கோயிலுக்குள் அனுமதிக்கக் கோரும் பாடகர் ஜேசுதாஸ்

பிரபல கர்நாடக இசைப் பாடகரும், திரைப்பட பின்னணிப் பாடகருமான ஜேசுதாஸ், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
பத்மநாப சுவாமி கோயிலுக்குள் அனுமதிக்கக் கோரும் பாடகர் ஜேசுதாஸ்

பிரபல கர்நாடக இசைப் பாடகரும், திரைப்பட பின்னணிப் பாடகருமான ஜேசுதாஸ், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்தக் கோயிலுக்குள் நுழைவதற்கு ஹிந்து மதக் கொள்கைகளில் நம்பிக்கையுடையவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், பிறப்பால் கிறிஸ்தவரான ஜேசுதாஸ், ஒரு சிறப்பு தூதர் மூலமாக கோயில் நிர்வாகத்துக்கு சனிக்கிழமை இரவு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், ஹிந்து மதக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட தன்னை கோயிலுக்குள் அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, கோயில் நிர்வாக அதிகாரி வி.ரதீசன் கூறியதாவது:
ஜேசுதாஸ், விஜயதசமி தினத்தன்று, அதாவது வரும் 30-ஆம் தேதி பத்மநாப சுவாமி கோயிலுக்கு வர விரும்புதாக அவரது தூதர் கூறினார். பாரம்பரிய வழக்கப்படி, ஹிந்து மதக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசிக்கலாம். ஜேசுதாஸ், ஹிந்து மதக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதை கடிதம் மூலமாக தற்போது உறுதிமொழி அளித்திருக்கிறார். எனவே, அவர் கோயிலுக்கு வருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.
இதேபோன்று, ஹிந்து மதக் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருக்கும் ஹிந்து மதத்தைச் சாராதவர்களும், வெளிநாட்டினரும், உறுதிமொழி அளித்த பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று வி.ரதீசன் கூறினார்.
இதற்கு முன்பு, குருவாயூர் கிருஷ்ணர் கோயில், மலப்புரத்தில் உள்ள கடம்புழா தேவி கோயில் ஆகியவற்றுக்குள் நுழைவதற்கு ஜேசுதாஸூக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனினும், சபரிமலை ஐயப்பன் கோயில், கர்நாடத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயில் ஆகியவற்றுக்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ள ஜேசுதாஸ், ஹிந்து மத பக்திப் பாடல்களையும் அதிக அளவில் பாடியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com