புதிய தொழில்நுட்பத்துடன் மின்னணு பரிவர்த்தனை உத்வேகம் பெறும்

இந்தியாவில் மின்னணு பணப் பரிவர்த்தனை, புதிய தொழில்நுட்பத்துடன் உத்வேகம் அடையும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
புதிய தொழில்நுட்பத்துடன் மின்னணு பரிவர்த்தனை உத்வேகம் பெறும்

இந்தியாவில் மின்னணு பணப் பரிவர்த்தனை, புதிய தொழில்நுட்பத்துடன் உத்வேகம் அடையும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
முன்னணி இணையதள நிறுவனமான கூகுள், மின்னணு பணப் பரிவர்த்தனைக்காக, 'தேஜ்' என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்தச் செயலியை அறிமுகப்படுத்திய பிறகு ஜேட்லி பேசியதாவது:
உயர் மதிப்புடைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்ப்டட பிறகு, அந்த ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
அதன் பிறகு, மக்களில் பெரும்பாலானோர் மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு மாறினர். மின்னணு பரிமாற்றம் தங்களுக்கு வசதியாக இருக்கிறது என்பதைக் காட்டிலும், வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு அவர்கள் மாறினர்.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸுக்குப் பிறகு, உச்சத்தை அடைந்த மின்னணு பணப் பரிவர்த்தனைகள், பிறகு சற்று சரிவைச் சந்தித்தன. இந்நிலையில், 'தேஜ்' என்னும் இந்தப் புதிய செயலி மூலம், மின்னணு பணப் பரிவர்த்தனை மீண்டும் உத்வேகம் பெறும்.
நிர்பந்தம் காரணமாக, மின்னணு பரிமாற்றத்துக்கு மக்கள் மாறினார்கள். பிறகு அதுவே அவர்களுக்கு வசதியாக மாறிப்போனது. இறுதியில், மின்னணு பணப் பரிமாற்றமே மக்களின் வழக்கமாக மாறிவிட்டது. தற்போது, 'தேஜ்' என்னும் இந்தப் புதிய செயலி மூலம், மின்னணு பரிவர்த்தனை, எளிமையாகி விட்டது. மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் அதிக அளவில் பலனளிக்கும் என்றார் ஜேட்லி.
'தேஜ் செயலி'- ஓர் அறிமுகம்: கூகுள் நிறுவனம், இந்திய மக்களின் மின்னணு பணப் பரிவர்த்தனைக்காக, 'தேஜ்' என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. 'தேஜ்' என்ற ஹிந்தி வார்த்தைக்கு 'வேகம்' என்று பொருளாகும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட் ஃபோன்களில் இந்தச் செயலியை பயன்படுத்த முடியும்.
மத்திய அரசின் நிதிச் சேவைக் கழகத்தின்(யுபிஐ) ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி மூலம், பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாகப் பணம் அனுப்பலாம். இந்தச் சேவைக்கு கட்டணம் கிடையாது. 
மேலும், நாடு முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு பணம் அனுப்புவதற்காக, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஆகிய 4 வங்கிகளுடன் இணைந்து தேஜ் செயலி செயல்படுகிறது. ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில், இந்தச் செயலியை பயன்படுத்தலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com