பெட்ரோல்-டீசல் விலை தீபாவளிக்கு முன்பு குறைய வாய்ப்பு

பெட்ரோல்-டீசல் விலை, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக குறைய வாய்ப்பிருப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலை தீபாவளிக்கு முன்பு குறைய வாய்ப்பு

பெட்ரோல்-டீசல் விலை, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக குறைய வாய்ப்பிருப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெட்ரோல்-டீசலின் விலை கடந்த சில நாள்களாக பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு பெட்ரோல்-டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தியதே காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸுக்கு வந்த மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், 'தீபாவளி பண்டிகைக்குள் பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது' என்றார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரித்திருப்பதற்கு, அமெரிக்காவில் மழை வெள்ளத்தின் காரணமாக எண்ணெய் உற்பத்தி 13 சதவீதம் அளவுக்கு சரிவடைந்திருப்பதே காரணம் ஆகும். எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. பெட்ரோல்-டீசல் விற்பனையின் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி) பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவது குறித்து கேட்கிறீர்கள். அதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று நம்புகிறேன். அவ்வாறு ஜிஎஸ்டி வரி வரம்புக்குள், பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு வரப்பட்டால், வாகன ஓட்டிகள் மிகப்பெரும் பயனடைவார்கள் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com