பெண் ராணுவ அதிகாரிக்கு மிரட்டல் தில்லியில் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது

தில்லியில் பெண் ராணுவ அதிகாரியை மிரட்டியதாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லியில் பெண் ராணுவ அதிகாரியை மிரட்டியதாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியின் துவாரகா பகுதியைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரி ஒருவரின், வாட்ஸ் அப் எண்ணுக்கு 2 மர்ம செல்லிடப் பேசி எண்களில் இருந்து அவரை ஆபாசமாக சித்திரித்து புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசக் கூடாது என்றும், அவ்வாறு பேசினால், அந்த புகைப்படங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் மர்ம நபர்கள் மிரட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த 2 எண்களில் இருந்து தனக்கு செய்திகள் வருவதை தடுக்கும் வகையில், தனது செல்லிடப்பேசியில் அந்த எண்களை முடக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த பெண் ராணுவ அதிகாரியின் மகளை ஆபாசமாக சித்திரித்து அவரது முகநூல் முகவரிக்கு, மற்றொரு முகநூல் முகவரியில் இருந்து படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பின்னர் ராணுவ அதிகாரியின் மகளைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், அவரது சித்திரிக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களையும் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து துவாரகா காவல் நிலையத்தில் பெண் ராணுவ அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து, முகநூல் முகவரி, 2 மர்ம செல்லிடப் பேசி எண்களின் முகவரியை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். 
அப்போது, பெண் ராணுவ அதிகாரி, அவரது மகள் ஆகியோரை மிரட்டியது துவாரகாவைச் சேர்ந்த முகமது பர்வேஸ் (30) என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, முகம்மது பர்வேஸை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானுக்கு பல முறை அவர் சென்று வந்திருப்பதும், பாகிஸ்தான் பயணத்தின்போது இந்தியாவில் வாங்கப்பட்ட ஏராளமான சிம்கார்டுகளை, அந்நாட்டினருக்கு பர்வேஸ் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன், முகம்மது பர்வேஸுக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையை தில்லி சிறப்புப் படை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் குறித்த முக்கியத் தகவலை பெறும் திட்டத்துடனேயே, பெண் ராணுவ அதிகாரியை பர்வேஸ் மிரட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com