ரயில்வேத்துறையை மின்மயமாக்க நடவடிக்கை: அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில்வேத்துறையில் ஏற்படும் டீசல் செலவை குறைக்கும் விதமாக மின்னூட்டத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ரயில்வேத்துறையை மின்மயமாக்க நடவடிக்கை: அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில்வேத்துறையில் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் முறையை அமல்படுத்த ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டம் ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரயில்வேத்துறையை நவீனப்படுத்துவது தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். குறிப்பாக ரயில்வேத்துறையில் டீசலின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.

இதனால் ஆண்டொன்றுக்கு ரூ.16,000 கோடி செலவை கட்டுப்படுத்த முடியும். எனவே ரயில்வேத்துறையை முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் விதமாக மாற்றியமைக்க உள்ளோம். எனவே அதுதொடர்பான விவரங்களை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

ரயில்வேத்துறையை நவீனப்படுத்த தேவையான அனைத்து உபகரணங்களும் அரசிடம் உள்ளது. மேலும் தேவையானவற்றை ஏற்படுத்தவும் முடியும். 

முன்னதாக இருந்த காங்கிரஸ் அரசாங்கம் ரயில்வேத்துறையை பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. அதனை நாங்கள் தற்போது தட்டி எழுப்பி வருகிறோம்.

பாஜக அரசு பதவியேற்ற பின் ரயில்வேத்துறையில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தண்டவாளங்கள் சீர்செய்யப்பட்டு வருகிறது. ஆளில்லாத லெவல் கிராஸிங் கண்டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் விபத்து ஏற்படுவது தடுக்கப்படும். இதற்கான நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து வருகிறோம். இன்னும் சில தினங்களில் அதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com