எங்களது திட்டங்களையே புதிய பெயரில் மோடி அரசு செயல்படுத்துகிறது: காங்கிரஸ் தாக்கு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட 23 திட்டங்களுக்கு, புதிய பெயர்களை வைத்து மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாக

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட 23 திட்டங்களுக்கு, புதிய பெயர்களை வைத்து மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மூத்த அரசியல் ஆலோசகர்களாக செயல்பட்ட சிலர், திடுக்கிடும் மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுகளால் முன்பு தொடங்கி வைக்கப்பட்ட 23 திட்டங்களுக்கு மோடி அரசு புதிய பெயர்களை வைத்து செயல்படுத்தி வருவதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில், இந்த 23 திட்டங்களையும் காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டபோது, அதை பாஜக அரசு ஏற்க மறுத்தது. அந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் அவர்கள் தோல்வியடைந்து விட்டனர். 
அதாவது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், திறன்மிகு இந்தியா திட்டம், ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம், விவசாயிகளுக்கு மண் வள அட்டை கொடுக்கும் திட்டம் என்று அனைத்து திட்டங்களிலும் அவர்கள் தோல்வியடைந்து விட்டது ஆதாரப்பூர்வமாகியுள்ளது. 
இந்திரா அவாஸ் யோஜனா திட்டமானது, பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. 
ராஜீவ் அவாஸ் யோஜனா திட்டமானது, சர்தார் படேல் தேசிய ஊரக வீட்டு வசதி திட்டம் என்றும், குறைந்தபட்ச தொகை இருப்பில் இல்லாத வங்கிக் கணக்குத் திட்டமானது, ஜன் தன் யோஜனா திட்டம் என்றும், தேசிய தயாரிப்பு கொள்கை திட்டமானது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளன. இதையே ராஜீவ் சுக்லா குறிப்பிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com