குருதாஸ்பூர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர்

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் அந்த மாநிலத் தலைவர் சுனில் ஜாக்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குருதாஸ்பூர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர்

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் அந்த மாநிலத் தலைவர் சுனில் ஜாக்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. குருதாஸ்பூர் எம்.பி.யும், பாஜக மூத்தத் தலைவருமான வினோத் கன்னா உயிரிழந்ததை அடுத்து, காலியான அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் கடந்த 15-ஆம் தேதி வெளியிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக சுனில் ஜாக்கர் போட்டியிட இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் சுனில் ஜாக்கர் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்தார் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் திவிவேதி, தில்லியில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுனில் ஜாக்கர், அந்த மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்குக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படுகிறது. அவரை வேட்பாளராகத் தேர்வு செய்ய குருதாஸ்பூர் பகுதி எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். எனினும், அந்தத் தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து அமரீந்தர் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்திய பிறகே சுனில் ஜாக்கருக்கு வாய்ப்பளித்தார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com