மூளை பக்கவாதம்: ஆந்திர முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி கவலைக்கிடம்

ஆந்திர முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி (91) மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, தில்லி தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூளை பக்கவாதம்: ஆந்திர முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி கவலைக்கிடம்

ஆந்திர முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி (91) மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, தில்லி தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் உள்ள வீட்டில் என்.டி. திவாரி புதன்கிழமை காலை இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, தில்லியின் சாகேட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், என்.டி. திவாரி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து என்.டி. திவாரி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், 'என்.டி. திவாரியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
உத்தரப் பிரதேச முதல்வராக கடந்த 1976-ஆம் ஆண்டில் பதவி வகித்த வீர் பகதூர் சிங்கை நீக்கிவிட்டு, என்.டி. திவாரியை இந்திரா காந்தி நியமித்தார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் என்.டி. திவாரியின் செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்தது.
இந்திய அரசியல்வாதிகளில் 2 மாநிலங்களின் முதல்வராக பதவியை வகித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் என்.டி. திவாரி ஆவார். அதாவது, ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும், உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராகவும் என்.டி. திவாரி பதவி வகித்துள்ளார். ராஜீவ் காந்தி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, ஆந்திர மாநில ஆளுநராக திவாரி பதவி வகித்துள்ளார். அப்போது அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, மத்திய அரசின் நிர்ப்பந்தத்தினால் ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை நேரிட்டது.
எனினும், காங்கிரஸ் கட்சியில் என்.டி. திவாரியும், அவரது மகன் ரோஹித் சேகரும் இருந்து வந்தனர். நிகழாண்டின் தொடக்கத்தில், உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் என்.டி. திவாரியும், ரோஹித்தும் இணைந்தனர். என்.டி. திவாரியின் முழு பெயர் நாராயண் தத் திவாரி என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com