நர்மதா அணைக்கட்டு விவகாரத்தில் 2019-க்குள் மோடியை அம்பலப்படுத்த வேண்டும்: மேதா பட்கர் சூளுரை! 

குஜராத்தின் நர்மதா அணைக்கட்டு விவகாரத்தில் 2019 பொதுத்தேர்தலுக்குள் பிரதமர் மோடியின் செய்கைகளை அம்பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.
நர்மதா அணைக்கட்டு விவகாரத்தில் 2019-க்குள் மோடியை அம்பலப்படுத்த வேண்டும்: மேதா பட்கர் சூளுரை! 

புதுதில்லி: குஜராத்தின் நர்மதா அணைக்கட்டு விவகாரத்தில் 2019 பொதுத்தேர்தலுக்குள் பிரதமர் மோடியின் செய்கைகளை அம்பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கட்டை பிரதமர் மோடி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். இத்தகைய வகை அணைக்கட்டுகளில் உலகின் பெரிய அணைக்கட்டுகளில் ஓன்று என்று புகழப்படும் இந்த அணைக்கட்டானது, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்கள் பயன் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது  

சாதாரண காலத்தில் 138.63 மீட்டர் உயரத்திற்கும், வெள்ள காலங்களில் 141 மீட்டர் வரையும் நீரைத் தேக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.இந்த அணையின் மூலம் 1450 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். அத்துடன் குஜராத்தில் 1.8 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் 1 மில்லியன் விவசாயிகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். மேலும் 173 நகரங்கள் மற்றும் 9490 கிராமங்களில் வசிக்கும் 30 லட்சம் மக்கள் இதன் மூலம் குடிநீர் வசதி பெறுவார்கள்.

ஆனால் புகழ் பெற்ற சமூக ஆர்வலரான மேதா பட்கர் 1980-களின் இறுதியில் இந்த திட்டம் பற்றிய கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே இத்திட்டத்தினை எதிர்த்து வருகிறார். இத்திட்டம் காரணமாக நர்மதா பள்ளத்தாக்குப் பகுதிகளில் உண்டாகும் இடப் பெயர்வு, மனித உரிமை மீறல்கள் மற்றும் அணைக்கட்டின் பல்வேறு மோசமான விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி அவர் தொடர் பிரச்சாரங்கள் மற்றும் நீதிமன்றங்கள் மூலம் தொடர்ந்து போராடி வருகிறார். இதற்காக அவர் 'நர்மதா பச்சோ அந்தோலன்' என்ற அமைப்பினையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'சர்தார் சரோவர் அணைக்கட்டின் தவறுகளும், வளர்ச்சி பற்றிய இன்றைய வாதங்களும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று தில்லியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மேதா பட்கர் பேசியதாவது:

இந்த அணைக்கட்டு திட்டத்திற்கு எதிரான நமது போராட்டம் இன்னும் முடியவில்லை. மத்திய பிரதேசத்தில் மட்டும் இன்னும் 40 ஆயிரம் குடும்பங்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் இன்னும் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட செயல்  திட்டம் இல்லாமல் வளர்ச்சி என்ற பெயரில் இந்த அரசின் மூலம் நடைபெற்ற ஒட்டு மொத்த ஊழல்களும்,   தவறான தகவல்களைக் கொண்டு நடத்தப்பட்ட பிரச்சாரங்களும், மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

மத்திய பிரதேசத்தில் தேவைக்கு அதிகமாக மின்சாரம் உள்ளது; அதேபோல குஜராத்தில் தேவைக்கு அதிகமாக  நீர்வளம் உள்ளது. இந்நிலையில் நரமதா பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் வாழ்விடங்களை மொத்தமாக அழித்து, கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

எனவே குஜராத்தின் நர்மதா அணைக்கட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் அரசாங்கத்தின் சார்பாக  நடந்துள்ள தவறான விஷயங்கள் அனைத்தையும் 2019 பொதுத்தேர்தலுக்குள் அம்பலப்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு என்ன நடக்கிறதோ அது அடுத்த ஐந்து வருடங்களுக்கு நம்மைத்  தொடரப் போகிறது.

இறுதியாக இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுத்த உச்ச நீதிமன்றத்தின் தவறான செய்கைகளையம். மோடிக்கு மற்றும் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரையும் மேதா பட்கர் தன்னுடைய உரையில் கண்டித்துப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com