காவிரி மேலாண்மை வாரியத்தை கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கிறது: முதல்வர் சித்தராமையா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை கர்நாடக அரசு கடுமையாக எதிர்ப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கிறது: முதல்வர் சித்தராமையா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை கர்நாடக அரசு கடுமையாக எதிர்ப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், மைசூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தசரா கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக புதன்கிழமை கருத்து தெரிவித்தனர். ஆனால் அது உத்தரவு அல்ல; கருத்துதான்.
இது தொடர்பாக நான் வழக்குரைஞர்களுடன் பேசி வருகிறேன். ஆரம்பத்தில் இருந்தே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை நாங்கள் எதிர்த்து வருகிறோம். எனவே, நமது இந்த நிலைப்பாட்டை வலுவான முறையில் நீதிமன்றத்தில் முன்வைக்குமாறும், இந்த விஷயத்தில் நமது விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படும் வகையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் வழக்குரைஞர்களைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
நமது விவசாயிகளின் நலன்களைக் காக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். காவரிப் படுகை பகுதியில் உள்ள விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை.
மீண்டும் முதல்வராக விருப்பம்: முதல்ராக நான் 5 முறை தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளேன். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நான் இந்தக் கொண்டாட்டங்களில் முதல்வராகப் பங்கேற்பதற்கு மக்களின் ஆசியைக் கோருகிறேன் என்றார் சித்தராமையா.
இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் விருப்பத்துடன் அவர் இருப்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக, சித்தராமையா கடந்த ஜூலை மாதம் கருத்து தெரிவிக்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்தான் தாம் போட்டியிடும் கடைசித் தேர்
தல் என்று தெரிவித்திருந்தார். 
இத்தேர்தலில் அவரையே தங்கள் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com