நவராத்திரி: 500க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை வலுக்கட்டாயமாக மூட வைத்த சிவ சேனா

நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளதை முன்னிட்டு, குர்கானில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை சிவ சேனா அமைப்பினர் வலுக்கட்டாயமாக மூட வைத்துள்ளனர்.
நவராத்திரி: 500க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை வலுக்கட்டாயமாக மூட வைத்த சிவ சேனா


குர்கான்: நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளதை முன்னிட்டு, குர்கானில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை சிவ சேனா அமைப்பினர் வலுக்கட்டாயமாக மூட வைத்துள்ளனர்.

குர்கானில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த முறை கேஎஃப்சி போன்ற உணவகங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை. அவர்கள் திறந்த நிலையில் இறைச்சியை விற்பனை செய்யவில்லை என்பதால். எங்களது விதிமுறையைக் கடைபிடிக்கவில்லை என்றால் நிச்சயம் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று குர்கானின் சிவ சேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரிது ராஜ் கூறினார்.

வெறும் இறைச்சிக் கடைகளுக்கு மட்டுமல்ல, சிறிய அசைவ உணவகங்களையும் மூடச் சொல்லி சிவ சேனா தொண்டர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், அடுத்த 9 நாட்களுக்குக் கடையைத் திறக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல பகுதிகளில் இருக்கும் இறைச்சிக் கடைகளும், அசைவ உணவகங்களும் மூடப்பட்டுவிட்டன. இல்லையென்றால், இவர்கள் வன்முறையை கையிலெடுப்பார்கள் என்று பயப்படுகிறோம் என்கிறார்கள் கடை உரிமையாளர்கள் கவலையோடு.

ஆனால், சிவசேனா தொண்டர்கள் கடைகளை வலுக்கட்டாயமாக மூடச் செய்ததாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்கிறது காவல்துறை தரப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com