மத்திய அரசு - தாவூத் இடையே ரகசியப் பேச்சுவார்த்தை: ராஜ் தாக்கரே விமர்சனம்

தலைமறைவாக உள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இந்தியா திரும்ப விரும்புவதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மகாராஷ்டிர நவநிர்மண் சேனை
மத்திய அரசு - தாவூத் இடையே ரகசியப் பேச்சுவார்த்தை: ராஜ் தாக்கரே விமர்சனம்

தலைமறைவாக உள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இந்தியா திரும்ப விரும்புவதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மகாராஷ்டிர நவநிர்மண் சேனை கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாஜக அரசியல் ஆதாயமடையத் திட்டமிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், இந்தியாவில் இருந்து தப்பியோடி பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைக் கண்டறிந்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டபோதிலும், பல ஆண்டுகளாக அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ராஜ்தாக்கரே மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தினார். அதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:
தாவூத் இப்ராஹிம் தற்போது உடல் ஊனமுற்றவராக இருக்கிறார். இதன் காரணமாக அவர் இந்தியா திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார். இதுதொடர்பாக மத்திய அரசுடன் தாவூத் பேச்சுவார்த்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது. அடுத்த மக்களவைத் தேர்தலின்போது அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற பாஜக திட்டமிட்டு வருகிறது.
இதை நான் வேடிக்கையாகக் கூறுகிறேன் என எண்ண வேண்டாம். இந்தத் தகவல் முழுக்க, முழுக்க உண்மை. அதனை கூடிய விரைவில் மக்கள் உணரப் போகிறார்கள். இந்தியா திரும்புவது குறித்து தாவூத் இப்ராஹிம் இறுதி முடிவு எடுத்துவிட்ட பிறகு, அந்த விஷயத்தை மோடி அரசு மிகப் பெரிய அளவில் பகிரங்கப்படுத்தப் போகிறது. இந்த நடவடிக்கைக்கு தாங்கள் மட்டுமே காரணம் என்று சுயதம்பட்டமும் அடித்துக் கொள்ளப் போகிறது. தாவூத் விவகாரத்தை முன்னிறுத்தி அரசியல் செய்வது பாஜகவின் அடுத்த தேர்தல் உத்தி என்றார் ராஜ் தாக்கரே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com