7 வங்கிகளின் கார்டுகள் மூலமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்: ஐஆர்சிடிசி மறுப்பு

7 வங்கிகளின் கார்டுகள் மூலமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்கிற தகவலுக்கு இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்
7 வங்கிகளின் கார்டுகள் மூலமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்: ஐஆர்சிடிசி மறுப்பு

புதுதில்லி: 7 வங்கிகளின் கார்டுகள் மூலமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்கிற தகவலுக்கு இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மறுப்பு தெரிவித்துடன் ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ளது. 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட 7 வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் ரயில் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், இந்த தகவலை மறுத்து ஐஆர்சிடிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனைத்து வகை கிரெடிட் மற்றும் டெபிட் வங்கிகளின் அட்டைகளை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com