பி.எஸ்.என்.எல். வாய்ஸ் எஸ்டிவி ரீசார்ஜ்களுக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் நவராத்திரி சலுகையாக பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையாக வாய்ஸ் எஸ்டிவி ரீசார்ஜ்களுக்கு 50
பி.எஸ்.என்.எல். வாய்ஸ் எஸ்டிவி ரீசார்ஜ்களுக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் நவராத்திரி சலுகையாக பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையாக வாய்ஸ் எஸ்டிவி ரீசார்ஜ்களுக்கு 50 சதவீகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். வாய்ஸ் எஸ்டிவி ரீசார்ஜ் செய்வோருக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

நாடு முழுக்க அனைத்து பி.எஸ்.என்.எல். பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் இந்த புதிய சலுகை செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்டோபர் 25-ஆம் தேதி வரை மொத்தம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்கள் சலுகையாக செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை புதிய விஜய் ஆஃபர் மூலம் வழங்கப்படும் 50 சதவீகித கேஷ்பேக் வாடிக்கையாளரின் கணக்கில் டாக்டைமாக சேர்க்கப்படும். இந்த சலுகை எஸ்டிவி 42, 44, 65, 69, 88 மற்றும் 122 ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படுகிறது. 

நாங்கள் எப்பொழுதும் பண்டிகை காலங்களில் கூடுதல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மைகள் அளிக்கும் சலுகைகளை கொண்டு வருவதாக பி.எஸ்.என்.எல் நிர்வாக இயக்குநர் ஆர்.கே. மிட்டல் தெரிவித்தார். 

சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.249 எனும் திட்டத்தை 28 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா செப்டம்பர் 25-ஆம் தேதி துவங்கி அக்டோபர் 25-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவன மொபைல் போன் ஒன்றை ரூ.2 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா நிறுவனங்களுடன் இணைந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய மொபைல் போன்கள் வெளியிடப்பட இருக்கிறது. பி.எஸ்.என்.எல். போன்றே மற்ற டெலிகாம் நிறுவனங்களும் புதிய சலுகை திட்டங்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கான தரவு மற்றும் குரல் வாய்ஸ்களை வெளியிடுவதில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. 71ஆவது தினத்தையொட்டி, 'ஃப்ரீடம் ஆஃபர்' வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, சமீபத்திய 'விஜய் ஆஃபர்' வெளியிடப்பட்டுள்ளது. இது பி.எஸ்.என்.எல் பிரீபெயிட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கட்டண சலுகை (எஸ்டிவி) மற்றும் காம்போ சலுகைகளை அளிக்கிறது.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஒரு 'சிக்ஸர்' அல்லது '666-க்கு' எஸ்டிவி என்ற திட்டம் உள்ளது, இது பி.எஸ்.என்.எல்.இல் இருந்து அனைத்து இணைப்பு செல்லிடப்பேசிகளுக்கும் உள்ளூர், வெளியூர் அழைப்புகளும், மற்ற இணைப்புகளுக்கு எல்லையற்ற அழைப்புகளும் இலவசம். 2 ஜி டேட்டா 60 நாள்கள் கால அளவாகும்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 'தன் தனா தன்' திட்டங்கள் மூலம் 399 ரூபாய்க்கு 84 ஜிபி டேட்டா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com