வாக்கு வங்கி அரசியலை விட நாட்டின் வளர்ச்சியே முக்கியம்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

வாங்கு வங்கி அரசியலை விட, நாட்டின் வளர்ச்சியே முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வாக்கு வங்கி அரசியலை விட நாட்டின் வளர்ச்சியே முக்கியம்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு


வாரணாசி: வாங்கு வங்கி அரசியலை விட, நாட்டின் வளர்ச்சியே முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று விலங்குகள் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கி கூடியிருந்த விவசாயிகள் மத்தியில் பேசினார்.

அப்போது, விலங்குகள் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்த உத்தரப்பிரதேச அரசு மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். 

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கனவு கண்டபடி புதிய இந்தியாவை உருவாக்க இந்த 5 வருடத்தை பயன்படுத்தி கொள்வோம். 

"பால் உற்பத்தியில் எங்கள் நாடு பெரியது, ஆனால் மற்ற பால் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டின் பால் உற்பத்தி குறைவாக உள்ளது". விலங்குகள் நலனுக்கு முக்கியத்துவம் தரும் மாநில அரசின் செயல் பாராட்டுக்குரியது. இந்த முயற்சியில் நமது கால்நடைகளை நல்ல பாராமரிப்பு மற்றும் பால் உற்பத்தி செய்ய உதவுவோம். இறுதியில் நம் நாட்டின் வளர்ச்சியில் அது உதவும். இந்த மருத்துவ முகாம் மூலம் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயன் அளிக்கும், நமது விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று கூறினார். 

பால் மற்றும் கூட்டுறவு துறையில் முன்னேற்றங்கள் கொண்டுவருவது நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். அரசின் மண் பரிசோதனை அடையாள அட்டை விவசாயிகளுக்கு கூடுதல் நன்மை தருவதாக அமையும்.

மேலும், எங்களை பொறுத்தவரை, வாக்கு வங்கி அரசியலைப் பற்றியோ அல்லது தேர்தலில் வெற்றிபெறுவதற்காகவோ ஆட்சி நடத்தவில்லை. நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை என்றவர், கட்சியை விட நாடே பெரியது. வாக்கு வங்கியைப் பற்றி நான் நினைக்கவில்லை. நமது நாட்டை சுத்தமான, சுகாதாரமான இந்தியாவாக தூய்மையாக வைத்திருப்பது நமது அனைவரின் கூட்டு பொறுப்பு என்றும் யாரும் அழுக்கு மற்றும் ஒரு அசுத்த சூழலில் வாழக்கூடாது என்றும் கூறினார்.

வாரணாசியில் உள்ள ஷகன்ஷக்பூர் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கழிவறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அப்போது நம் நாட்டை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமையாகும். தூய்மையான இந்தியா ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுக்கும். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கழிவறை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அடிக்கல் நாட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com