7 வங்கிகளின் கார்டுகள் மூலமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்: ரயில்வே துறை

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இணையதளத்தின் மூலம் ஏழு வங்கிகளைச் சேர்ந்த டெபிட் மற்றும் கிரெடிட்
7 வங்கிகளின் கார்டுகள் மூலமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்: ரயில்வே துறை

புதுதில்லி: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இணையதளத்தின் மூலம் ஏழு வங்கிகளைச் சேர்ந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

முன்பு பயணிகள் ரயில் நிலையத்துக்கு சென்று தான் பயணச்சீட்டு எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது பெரும்பாலானோர் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் வீட்டில் இருந்து கொண்டே ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொண்டு பயணித்து வந்தனர். இதற்கு இதுவரை அனைத்து வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக முன்பதிவு பயணச்சீட்டு எடுக்கப்பட்டு வந்தன. அதற்கு என சேவை கட்டணம் பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. 

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டபோது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் சேவை கட்டணமாக ரூ.20 என பிடித்தம் செய்யப்பட்டது. மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக இதனை ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி செய்தது. இழப்புத் தொகை 20 ரூபாயில் ஐஆர்சிடிசி 10 ரூபாயையும் வங்கி நிர்வாகம் 10 ரூபாயையும் பகிர்ந்துகொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி தற்காலிகமாக ஒரு விதிமுறையை வகுத்தது. அதன்படி ரூ.1000 வரை டிக்கெட் எடுப்பவர்களுக்கு 0.25 சதவீதமும், ரூ.2000 வரை 0.5 சதவீதமும், ரூ.2000-க்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 1 சதவீதமும் சேவை கட்டணமாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் வசூலிக்கப்பட்டது.

பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு பிறகு ரூ.1000 வரை ரூ.5-ம், ரூ.2000 ஆயிரம் வரை ரூ.10, ரூ.2000-க்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 0.5 சதவீதமும் சேவை கட்டணமாக வசூலிக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இந்த கட்டணம் வசூலிப்பதில் ஐஆர்சிடிசி இணையதளத்துக்கும், வங்கிகளுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டன.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி சார்பில் தெரிவிக்கையில், இதனால் தங்களூக்கு 35 சதவீதத்திற்கும் மேலான பண பரிவர்த்தனைகளையும், "ஒவ்வொரு நாளும் நாங்கள் 50 ஆயிரம் பரிவர்த்தனைகள் இழந்து வருகிறோம். இதற்கு ஐஆர்டிசிசி எங்களுக்கு பணம் தரவில்லை என்பதால், எங்கள் செலவினங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து மீட்டுக் கொண்டுவருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும், இந்த வருவாய் இழப்பை வங்கிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தது. இதற்கு சில வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்துடன்  சம்மதம் தெரிவிக்கவில்லை. 

இதையடுத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட 7 வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து மட்டுமே ஐஆர்சிடிசி மூலம் ரயில் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com