இரு மாதங்களில் அடுத்த பிஎஸ்எல்வி ராக்கெட்: இஸ்ரோ தகவல்

நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் அடுத்த பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் ஏவ இருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
இரு மாதங்களில் அடுத்த பிஎஸ்எல்வி ராக்கெட்: இஸ்ரோ தகவல்

நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் அடுத்த பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் ஏவ இருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி39 ராக்கெட், தோல்வியில் முடிந்தது. இது இஸ்ரோவுக்கு சிறிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 68-ஆவது தேசிய விமான அறிவியல் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் கூறியதாவது:
பிஎஸ்எல்வி-சி39 ராக்கெட் தோல்வியடைந்ததற்கான சரியான தொழில்நுட்பப் பிரச்னை என்ன? என்பதைக் கண்டறிய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராக்கெட்டில் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்பது உறுதி. ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரியும்போது வெப்பத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தகடுகளில்தான் தொழில்நுட்பப் பிரச்னை இருக்க வேண்டும். இதனைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் எழாது.
ராக்கெட், ஏவுகணைத் தயாரிப்பில் இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளது. அதேபோல பயணிகள் விமானத் தயாரிப்பிலும் நமது நாடு சிறந்து விளங்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com