ஏழைச் சிறார்களின் கையில் துப்பாக்கியை திணிக்கும் நக்ஸல் அமைப்புகள்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

நக்ஸல் அமைப்புகள் ஏழைச் சிறார்களின் கைகளில் துப்பாக்கியைத் திணிக்கின்றன; பின்தங்கிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஏழைச் சிறார்களின் கையில் துப்பாக்கியை திணிக்கும் நக்ஸல் அமைப்புகள்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

நக்ஸல் அமைப்புகள் ஏழைச் சிறார்களின் கைகளில் துப்பாக்கியைத் திணிக்கின்றன; பின்தங்கிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுவர்தாஸ் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 1000 நாள்கள் ஆனதையொட்டி அந்த மாநிலத்தின் தும்கா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், நக்ஸல் அமைப்புகள் அவற்றை சீர்குலைப்பதற்கான அனைத்து நாசவேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. பின்தங்கிய பகுதிகளில் உள்ள ஏழை மக்களையும், மலைவாழ் மக்களையும் அவர்கள் தவறாக வழி நடத்துகின்றனர்.
ஏழைக் குழந்தைகளின் கைகளில் நக்ஸலைட்டுகள் துப்பாக்கிகளை திணிக்கின்றனர். ஆனால், தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் துப்பாக்கிகளை அளிப்பது இல்லை. நமது நாட்டில் இருந்து நக்ஸல்களை வேருடன் அழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய விரும்பும் நக்ஸல்கள், அரசு விதிகளின்படி நடந்து கொண்டால், அவர்கள் மீதான வழக்குகளை கைவிடுவது குறித்து பரிசீலிக்கப்படும்.
நாட்டில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்று மத்திய அரசு உழைத்து வருகிறது. ஆனால், சிலர் இந்த முயற்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களின் பட்டியலில் ஜார்க்கண்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது. 
தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு எளிமையாக்கியதை அடுத்து, அதிக தொழில் தொடங்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் 27-ஆவது இடத்தில் இருந்து 7-ஆவது இடத்துக்கு ஜார்க்கண்ட் மாநிலம் முன்னேறியுள்ளது. 
முதல்வர் ரகுவர்தாஸ் தலைமையிலான சிறப்பான ஆட்சியும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முன்பு ஜார்க்கண்ட் மாநில அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது. 
இப்போது மாநிலத்தில் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது என்றார் ராஜ்நாத் சிங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com