காஷ்மீர் விவகாரம்: சீனா கருத்து

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் விவகாரம்: சீனா கருத்து

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சீனா கூறியுள்ளது.
இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உலக நாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கவுன்சில் வலியுறுத்தியது.
இந்நிலையில், சீனாவின் பெய்ஜிங் நகரில் அந்நாட்டு வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் லூ காங், பத்திரிகையாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
வரலாற்றில் நீங்காத இடம் பிடித்திருக்கும் பிரச்னையாக காஷ்மீர் விவகாரம் விளங்கி வருகிறது. இதுதொடர்பான ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கவுன்சிலின் கோரிக்கைகளை சீனா பரிசீலிக்கப் போவதில்லை. அதேவேளையில், இப்பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றார் லூ காங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com