நிர்வாகப் பொறுப்பை மக்கள் பிரதிநிதிகளிடம் விட்டுவிடுங்கள்: நீதிபதிகளுக்கு சட்ட அமைச்சர் வலியுறுத்தல்

'மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்படும் ஒரு சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கருதினால், அதனை ரத்து செய்யும் அதிகாரம் நீதித் துறைக்கு உள்ளது; அதேவேளையில், நிர்வாகப் பொறுப்பை

'மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்படும் ஒரு சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கருதினால், அதனை ரத்து செய்யும் அதிகாரம் நீதித் துறைக்கு உள்ளது; அதேவேளையில், நிர்வாகப் பொறுப்பை மக்கள் பிரதிநிதிகளிடமே விட்டுவிட வேண்டும்' என்று நீதிபதிகளுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
ஒரு சில நீதிமன்றங்கள், நிர்வாகப் பொறுப்பையும் கையிலெடுக்கும் வகையில் செயல்படுவதை கவனித்து வருகிறேன். இதனை சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. நிர்வாகப் பொறுப்பானது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் அளிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு சட்டமோ அல்லது அரசு பிறப்பிக்கும் உத்தரவோ, அரசியல் சாசனத்துக்கு புறம்பானது என்று கருதினால், அதனை ரத்து செய்யும் அதிகாரம், நீதித் துறைக்கு உள்ளது. 
அதேபோல, முறையான சட்டங்களைச் செயல்படுத்தச் செய்வதற்கான உரிமையும், தவறிழைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமையும் நீதித் துறைக்கு உள்ளது. அதேவேளையில், நிர்வாகப் பொறுப்புகளை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோரிடம் விட்டுவிட வேண்டும். சட்டமியற்றும் பணியையும் மக்கள் பிரதிநிதிகளிடம் விட்டுவிட வேண்டும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான ஹெச்.எல்.தத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com