மோடியின் சொத்து மதிப்பு ரூ.2 கோடி

பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. தனது சொத்து விவரங்களை மத்திய அரசு இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
மோடியின் சொத்து மதிப்பு ரூ.2 கோடி

பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. தனது சொத்து விவரங்களை மத்திய அரசு இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
மோடி தவிர 15 மத்திய அமைச்சர்களும் இதுவரை தங்கள் சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளனர். முன்னதாக, அமைச்சர்கள் அனைவரும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டுமென்று ஆட்சி அமைத்தபோது மோடி அறிவித்தார். சொத்துகள் மட்டுமன்றி கடன் இருந்தால் அந்த விவரத்தையும் தெரிவிக்க வேண்டுமென்று அவர் கூறியிருந்தார். மத்திய அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் நோக்கில் இந்த உத்தர பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் உள்ள 92 பேரில் 15 அமைச்சர்கள் மட்டும் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி, மேனகா காந்தி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் இதுவரை சொத்து விவரங்களை வெளியிடவில்லை.
மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பாகக் கூறுகையில், 'கடந்த இரு ஆண்டுகளாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சொத்து விவரம் குறிப்பிட்ட காலத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டில் அவரது சொத்துகள், நிரந்தர வைப்பு நிதி தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகிறோம். விரைவில் அவரது சொத்து விவரங்கள் வெளியிடப்படும்' என்றனர்.
உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவின் அலுவலகத்தில் இருந்து இது தொடர்பாக வெளியிடப்பட்ட தகவலில், 'அமைச்சரின் சொத்து விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவை வெளியிடப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் சொத்து விவரங்களைப் பெற்று வெளியிடும் பொறுப்பை உள்துறை அமைச்சகம்தான் ஏற்றுள்ளது. அமைச்சர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com