பிறந்த 6 நிமிடங்களிலேயே ஆதார் எண் பெற்ற அதிசய பெண் குழந்தை!

மகாராஷ்டிராவில் உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் இன்று பிறந்த பெண் குழந்தைக்கு, பிறந்த சில
பிறந்த 6 நிமிடங்களிலேயே ஆதார் எண் பெற்ற அதிசய பெண் குழந்தை!

உஸ்மனாபாத்: மகாராஷ்டிராவில் உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் இன்று பிறந்த பெண் குழந்தைக்கு, பிறந்த சில நிமிடங்களில் முக்கிய அடையாள சான்றான ஆதார் எண் கிடைத்தது அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக நடந்தேறியுள்ளது. 

மகாராஷ்டிராவில் உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் மருத்துவமனை இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.03 மணியளவில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு பாவனா சந்தோஷ் ஜாதவ் என பெற்றோரால் பெயரிடப்பட்டுள்ளது. 

புதிதாக பிறந்த குழந்தை மற்றும் அவரது தாயார் நலமாக இருப்பதாக மருத்துவமனையின் பொது மருத்துவர் ஏக்னத் மேலட் கூறினார். 

இந்நிலையில், 12.09 மணியளவில் ஆன்லைன் வழியே அந்த பெண் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் முக்கிய அடையாள சான்றான ஆதார் எண் இந்தியாவின் தனி அடையாள ஆணையத்திடம் (யுஐடிஏ) இருந்து ஆதார் எண்ணும் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ண கேம் தெரிவித்துள்ளார்.

பிறந்த சில நிமிடங்களில் முக்கிய அடையாள சான்று பெறுவது அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும் இது உஸ்மனாபாத்திற்கு பெருமை சேர்க்கும் விசயம் என கூறிய அவர், ஆதார் எண் பெறுவதற்கு அனைத்து குழந்தைகளையும் விரைவில் பதிவு செய்து வருவதாகவும், அவற்றை பெற்றோரின் ஆதார் அட்டைகளுடன் இணைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஒரு ஆண்டில் உஸ்மனாபாத் மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் பிறந்த 1,300 குழந்தைகளுக்கும் ஆதார் எண்கள் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com