ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை வென்றது இந்தியா!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை வென்றது இந்தியா!

இந்தூர்:  இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இந்திய பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். வார்னர் 42 ரன்களை சேர்த்தார். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்மித் அரைசதம் கடந்தார். 5 பவுண்டரிகளின் உதவியுடன் 63 ரன்கள் சேர்த்தார். ஆனால் அடுத்த களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 5, டிராவிஸ் ஹெட் 4, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 3 என ஒற்றை இலக்க ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியி்ன் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களாக இருந்தது. அப்போது 50 ஓவர்களின் முடிவில் 350-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்து. 

இதனையடுத்து முதல் இரு ஆட்டங்களில் அபார வெற்றி கண்ட இந்திய அணி, 3-ஆவது ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் 294 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இந்திய அணி களமறங்கியது. 

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் ரஹானே இருவரும் ஆஸ்திரேலியா பந்துவீச்சு சிறப்பாக எதிர்கொண்டனர். முதல் விக்கெட்க்கு 139 ரன்கள் சேர்த்தனர். 

இறுதியில் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 47.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இந்த வெற்றி மூலம் தொடர்ச்சியாக 9 வெற்றிகள் எனும் முந்தைய தனது சொந்த சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது. 

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 71, ரஹானே 70, பாண்டியா 72 பந்துகளில் 78 ரன்களை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவருக்கு உதவியாக களத்தில் நின்ற மணீஷ் பாண்டே 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக களமிறங்கிய தோனி மூன்று ரன்களுடன் களத்தில் நிற்க வேண்டியிருந்தது. 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பின்ச் 124, ஸ்மித் 63, வார்னர் 42 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் கியூமின்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும் பாண்டியா, சஹால் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com