உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோயிலில் வழிபாடு செய்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். உடன், அந்த மாநில ஆளுநர் கே.கே.பால், மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்.
உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோயிலில் வழிபாடு செய்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். உடன், அந்த மாநில ஆளுநர் கே.கே.பால், மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்.

கேதார்நாத்தில் ராம்நாத் வழிபாடு

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆலயங்களில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்தார்.

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆலயங்களில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்தார்.
இதுகுறித்து கேதார்நாத் கோயிலின் தலைமை துணைச் செயல் அதிகாரி அனில் சர்மா கூறியதாவது:
கேதார்நாத் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வந்தார். அவருடன் அவரது மனைவி சவிதாவும், குடும்பத்தினரும் வந்தனர். கோயிலில் அரை மணி நேரம் வரை அவர் இருந்தார்.
மூலவர் சன்னதியில் அவர் ருத்ராபிஷேகம் செய்தார்.
உத்தரகண்ட் ஆளுநர் கே.கே.பால், மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோரும் ராம்நாத்துடன் வந்தனர் என்றார் அனில் சர்மா.
அங்கிருந்து கௌசர் பகுதிக்குச் சென்ற ராம்நாத் கோவிந்த், அங்குள்ள இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.
பின்னர், அங்கிருந்து பத்ரிநாத் கோயிலுக்குச் சென்றார். அங்கு 20 நிமிடங்களை வரை இருந்த அவர், அங்கிருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, ஹரித்துவாருக்கு சனிக்கிழமை குடும்பத்தினருடன் சென்று கங்கை நதியை ராம்நாத் வழிபட்டார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு உத்தரகண்ட் மாநிலத்துக்கு ராம்நாத் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com