பாஜக கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்பதை சிவசேனை முடிவு செய்ய வேண்டும்: சரத் பவார்

மகாராஷ்டிரத்திலும், மத்திய அரசிலும் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்பதை
பாஜக கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்பதை சிவசேனை முடிவு செய்ய வேண்டும்: சரத் பவார்

மகாராஷ்டிரத்திலும், மத்திய அரசிலும் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்பதை சிவசேனை முடிவு செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வலியுறுத்தினார்.

மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பதுடன், விலையேற்றத்துக்கு எதிராக குரலெழுப்பி வரும் சிவசேனை கட்சியின் செயல்பாடு பாராட்டுக்குரியது. இருப்பினும், அக்கட்சி தனது கொள்கை என்னவென்று முடிவு செய்ய வேண்டும். தாம் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறமோ? அல்லது எதிர்க்கட்சியாக செயல்படப் போகிறோமா? என்பதை சிவசேனை முடிவு செய்ய வேண்டும் என்றார் பவார்.

சிவசேனை கூட்டணியிலிருந்து விலகிவிட்டால், மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கருத்து தெரிவித்திருப்பது குறித்து பவாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு, "அவரது பேச்சை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை' என்று பதிலளித்தார் பவார்.

ஆமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "புல்லட் ரயில் ஒரு வெள்ளை யானை. இத்திட்டத்தால் மகாராஷ்டிர அரசுக்கு மிகப் பெரிய நிதிச் சுமை ஏற்படப்போகிறது. இத்திட்டத்துக்கு பயன்படுத்தும் நிதியை நீர்ப்பாசனத் திட்டத்துக்குப் பயன்படுத்தலாம்' என்றார்.

முன்னதாக, சிவசேனை கட்சி பாஜக கூட்டணியைவிட்டு பிரியாது; ஒருவேளை பிரியும் சூழல் ஏற்பட்டாலும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியைத் தக்க வைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று மும்பையில் ராம்தாஸ் அதாவலே தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com