முல்லைப் பெரியாறு அணையில் நீர் கசிவு: மீண்டும் பழைய கதையை ஆரம்பித்த கேரளா

முல்லைப் பெரியாறு அணியின் மதகுகள் எண் 10 மற்றும் 11 ஆகியவற்றுக்கு இடையே நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கேரள நீர்வளத் துறை மீண்டும் பழைய கதையை ஆரம்பித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் நீர் கசிவு: மீண்டும் பழைய கதையை ஆரம்பித்த கேரளா


குமுளி: முல்லைப் பெரியாறு அணியின் மதகுகள் எண் 10 மற்றும் 11 ஆகியவற்றுக்கு இடையே நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கேரள நீர்வளத் துறை மீண்டும் பழைய கதையை ஆரம்பித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் ஏற்பட்டிருக்கும் நீர் கசிவால், பாதுகாப்புப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக கேரள நீர்வளத் துறை சார்பில் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டிய நிலையில், நீர் கசிவு ஏற்பட்டிருப்பதாக கேரளா கூறியுள்ளது. அதோடு, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதோடு, அணையைப் பராமரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த அணை கண்காணிப்புக் குழு, மாதம்தோறும் அணையை ஆய்வு செய்து பராமரிப்புப் பணிகளை செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் தமிழக அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு தராததால் அணையை ஆய்வு செய்ய முடியாமல் போவதாகவும், கேரளாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com